Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அரசியல் மிக ஆபத்தான விளையாட்டு. அதனை மிக கவனமாக விளையாட வேண்டும் என நடிகர் ரஜினிகாந் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ஒரு “மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், “அரசியல் மிகப்பெரியதும், மிக ஆபத்தானதுமான விளையாட்டு. அதனால் அதை நான் கவனமாக விளையாட வேண்டும். அதற்கு நேரமும் மிக முக்கியம்.சினிமாவில் என் நடிப்பிற்கு நான் ஊதியம் வாங்குகிறேன்.

ஆனால் அரசியல் அப்படி கிடையாது. பூக்கள் நிறைந்த பாதையாக அது இல்லை. ஆனால் அதில் நான் நானாக இருப்பேன். ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அறிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் முடிவடைகின்றது. இருப்பினும் இன்னும் அவருடைய அரசியல் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறிருக்க, அரசியல் கட்சி தொடங்கும் பணி 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்றும் சமீபத்தில் ரஜினி அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்