Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ரயில் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளது.மகேந்திரா ரக பட்டா வாகனத்தின் பின்பகுதியிலேயே ரயில் மோதியது. இதனால் வாகனம் வீதிக்கு தள்ளப்பட்டமையால் படுகாயமடைந்த நிலையில் சாரதி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி கொடிகாமம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்