Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யேமனின் ஹொதைடா துறைமுகத்தில் மனிதாபிமான ரீதியில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் வலியுறுத்தியுள்ளார்.
யேமன் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் நல்லெண்ண அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்கள் றியாத்தில் இடம்பெற்ற யேமன் தொடர்பான காலாண்டு பொருளாதாரக் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஐ.நா. அதிகாரி, சவுதி தலைமையிலான கூட்டணியுடனான யேமன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர், ஹொதைடா துறைமுகம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளின் செயற்பாடுகள் குறித்தும் நிவாரண உதவிகள் குறித்தும் மேற்பார்வையிடுவதில் ஐ.நா. ஒரு வலுவான பாத்திரம் வகிக்கிறது.

யேமனுக்கு உதவியளிப்பதற்கு ஏதுவாக ஏராளமான துறைமுகங்கள் காணப்படுகின்றன. ஆனால் அம்மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்ற ஒரே மார்க்கமாக ஹொதைடா துறைமுகம் காணப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்