Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நாட்டில் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டுமென்றால் சட்டபூர்வமான அரசொன்று தேவையென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் தோன்றித்தனமாக செயற்படாமல் நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள ஒருவரை ஜனாதிபதி, பிரதமராக நியமிப்பதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு சிறந்த தீர்வெனவும் ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தேர்தலொன்றை நடத்துவதாயின் அதற்கு சட்டரீதியான அரசாங்கமொன்று இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.இதனால் ஜனாதிபதி, சர்வதிகார போக்கில் ஈடுபடுவதை தவிர்த்து, சட்ட ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்