Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜப்பானிய வான் பரப்பில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் கடலோரக் காவல்படையினரின் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை அந்த பகுதியில் இரண்டு போர் விமானங்கள் விபரிக்க முடியாத விபத்தொன்றை எதிர்கொண்ட நிலையில், அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த அனர்த்தம் ஜப்பானிய பிராந்திய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கரையோரக் காவல்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து கிழக்

காக சுமார் 200 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரண்டு ஜெட் ரக போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் உடைந்து வீழ்ந்துள்ளன.

இதனிடையே, தீவிர தேடுதலின் பின்னர் காணாமல் போயிருந்த 7 பேரில் இரண்டு பேர் நீண்ட நேரத்திற்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்டனர்.அத்துடன் அமெரிக்க கடற்படையினருக்கு உதவியாக ஐப்பானிய படையினரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுப்டடுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்