Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சீன உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் சிக்கியிருந்த 29 வயதான ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அந்த நபர், உணவகத்தில் களவாடும் நோக்கில் வந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சான் பிரான்சிஸ்கோ பகுதியில் உள்ள குறித்த விருந்தகத்தின் கழிவு எண்ணெய் அகற்றும் குழாயில் இருந்து ‘உதவிக்கான அவலக் குரல்’ வந்ததை அடுத்து அவசர மீட்புப் பிரிவில் அங்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.

குறித்த நபர் மிகவும் சோரவடைந்திருந்ததுடன், உடல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் முழுமையாக குணமடையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் குறித்த கட்டிடத்திற்குள் பலவந்தமாக நுழைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த நபர் அங்கு திருடுவதற்காக வந்தாரா என்பது தௌிவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்