உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சர்வாதிகார் ஆட்சி நடைபெறும் லிபியா மீது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் படைகள் தாக்குதலைத் துவங்கின.
லிபியா வான் எல்லை மீது விமானம் பறக்க ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்ததைத் தொடர்ந்து, கூட்டுப் படைகள், லிபியத் தலைவர் கர்னல் கடாபி படைகள் மீது தாக்குதலைத் துவங்கின.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் படைகளின் ஏவுகனைகள் லிபியாவின் 20 விமான பாதுகாப்பு இலக்குகளை தாக்கின. யு.எஸ்.சும், யு.கே.யும் 110 ஏவுகணைகளுக்கு மேல் வீசியதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர் போராட்டக்காரர்களின் மையப்பகுதியாக உள்ள பெங்காசியில், லிபியா வீரர்கள் தாக்கினர்.

அவர்களை ஒடுக்குவதற்க்கு பிரெஞ்சு விமானம் தாக்குதலைத் தொடர்ந்தது. கூட்டுப்படைகளுக்கு எதிராக கடாபி சவால் விடுத்தால் லிபியாவை காப்பாற்ற ஆயுதக்கிடங்குகளை பொதுமக்களுக்காக திறந்து விடப்போவதாகவும் அவர் முழக்கமிட்டார்.

லிபிய வான்பரப்பில் பறந்து இராணுவ வாகனமொன்றின்மீது பிரெஞ்சு போர் விமானமொன்று இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கான தடைக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கிய பிறகு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலாகும்.

இதனை பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தியரி புர்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி.எம்.ரி.நேரப்படி 16.45 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10 மணி) இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் 20 பிரன்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கூறினார்.

இராணுவ வாகனமொன்றே இலக்கு வைக்கப்பட்டதாக புர்கார்ட் கூறினார். எனினும் எந்த வகையான வாகனம் என அவர் கூறவில்லை. விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதில் லிபிய வான் பரப்பில் சுமார் 20 யுத்த விமானங்கள் பறந்துவருவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பென்காசி நகரில் இருக்கும் பொது மக்களை பாதுகாக்கவும், கிளர்ச்சியாளர்கள் மீது கேணல் கடாபி தாக்குதல்கள் நடத்துவதை தடுக்கவும் பிரான்ஸ் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிபர் நிக்கலா சர்கோசி தெரிவித்திருந்தார்.

One Response to “லிபியா மீது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் படைகள் தாக்குதலைத் துவங்கின”

  • Nalliah Thayabharan:

    ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் இந்த உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்யும் புதிய அணுகுமுறையாகவே லிபியா மீது தாக்குதல் தொடங்கியிருக்கிறார்கள் . ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்