உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மொராக்கோவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இரண்டு ஐரோப்பிய பெண்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மொராக்கோவில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்பாக நேற்று(சனிக்கிழமை) இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுமனித உரிமைகள் காண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மொராக்கோவிற்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். நோர்வே நாட்டு பிரஜையான Maren Ueland மற்றும் டென்மார்க் நாட்டு பிரஜையான Jespersen ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்