உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


காத்தான்குடியில் காணி ஆக்கிரமிப்பை தடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச பெண்களால் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பிரதேச செயலாளரே சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பைத் தடை செய், பல நூற்றாண்டு காலமாக மக்கள் பாவனையிலிருந்த காணியை தனி நபருக்குக் கொடுக்காதே, பொது மக்களுக்கு அநீதி செய்யாதே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெண் பொலிஸார் உட்பட பல பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்