உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலியாயினர்.
மேலும் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 46 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தென்மேற்கு பாகிஸ்தான் பகுதியில் குவெட்டாவுக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் சோரங் பகுதியில் பழமையான சுரங்கம் உள்ளது.

சுரங்கத்தை பாகிஸ்தான் கனிம வள மேம்பாட்டுக் கழகம் நடத்தி வருகிறது. இந்த சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 46 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் சிக்கிக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 பேர் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்கள். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாயமாகியுள்ள 46 பேரையும் மீட்க மீட்புப்படை வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்