உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


டென்மார்க்கில் இன்று காலை இடம்பெற்ற தொடருந்து விபத்தொன்றில் ஆறுபேர் கொல்லப்பட்டனர் மேலும் 16 பேர்காயமடைந்தனர்.தலைநகர் ஹோபன்ஹேகன் உள்ள தீவையும் ஒடென்ஸ் தீவையும் இணைக்கும் தொடருந்துப்பாலத்தின் மேல் இந்த விபத்து இடம்பெற்றது. சரக்குதொடருந்து பெட்டிகளில் மூடிக்கட்டப்படும் தடித்த பிளாஸ்ரிக்விரிப்பு ஒன்று கழன்று எதிரே வந்த பயணிகள் தொடருந்தில் மோதியது. இதனையடுத்து அதன் சாரதி சடுதியான வேகத்தடையை(பிறேக்) அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்ட நேரம் கடுமையாக காற்று வீசியதால் பயணிகள் தொடருந்து தனது கட்டுப்பாட்டை ஓரளவு இழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தையடுத்து மேற்படி பயணிகள் தொடருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் அதிகளவாக பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றமை டென்மார்க்மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்