கனவாய் தொக்கு
கனவாய் மீன் – அரை கிலோ
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
தாளிக்க:
கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கனவாய் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லிதூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.அடுத்து அதில் சுத்தம்செய்த கனவாய் மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.உப்பை சேர்த்து கிளறி அடுப்பை குறைத்துவையுங்கள்.அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் இறக்குங்கள்.