Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



5000 ரூபா கள்ள நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று (10) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயதாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் ரெஜிகேசனுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இருவரும் இன்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் இரு இளைஞர்களிடமும் விசாரணை முன்னெடுத்து வருகின்றதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்