Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



யாழ் – சித்தன்கேணி பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு குந்தகமாக செயற்படும் ஆசிரியர்கள் இருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சித்தன்கேணி பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 7.00 மணியளவில் இந்த கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த பாடசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 200 வருடங்களை எட்டவுள்ள இந்தப் பாடசாலையில் பல தலைமுறைகளாக ஆசிரியர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், தற்போது கற்பிக்கும் சகோதர ஆசிரியர்கள் இருவர், மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், மாணவர்களுக்கு வழிகாட்டலுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்றும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு நன்றாக கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு வலயக் கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களை வழிநடத்த தவறும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாது, ஏனைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய எத்தணிப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனவே, இந்த இரு ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கி, ஏனைய ஆசிரியர்களை இந்தப் பாடசாலையில் கற்பிப்பதற்கு ஆவண செய்ய வேண்டுமென்றும், இந்தப் பாடசாலையை மூடுவதற்கான ஏற்பாடுகளை நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்