Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சவாலாக 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரமளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தேர்தல் பிரசாரத்தில் யுத்தம் மற்றும் சமாதானம் குறித்த சிக்கல்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.ஈராக் போரில் பங்கெடுத்த முன்னாள் படைவீரரான இவர், அமெரிக்கா காங்கிரஸிற்கு தெரிவான முதலாவது இந்து பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்