Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் இணையத்தில் விட்ட அறிவித்தலுக்கு மன்ற நிர்வாகத்தின் பதில்.

 மன்றத்தில் இன்று நடைபெற்ற கட்டிடகுழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள்ளவாறு ; கோயில் கட்டுவது தொடர்பாக இன்று கட்டிட குழு கலந்துரையாடலின் படி கோயில் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. கோயில் கட்டிடம் கட்டிட கலைஞரின் திட்டத்திற்கு அமைவாக இல்லாது கட்டப்படுவதாக வெளியிடப்பட்ட அனோமதேய துண்டுப்பிரசுரம் தவறானது என்று குழு தீர்மானித்துள்ளது. காரணம் கட்டிட கலைஞரின் கடந்த 12.03.2011 இல் நடந்த ஊர் மக்களுக்கான காட்சிப்படுத்தல் விளக்கத்தில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் உங்கள் ஆகமவிதிப்படி திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும். ஆனால் ஒதுக்கிய இடம் மாற்றமுடியாது என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படியே கட்டிடம் அமைக்கப்படுகிறது. ஆலயம் அமையும் பகுதி கட்டிட வரைபடத்தின் படியான மைதானத்தை உருவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த ஆலய நகர்வுக்கு அதாவது மைதானத்தை அமைக்கும் வகையிலான இடமாற்றத்துக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி கூறுவதோடு இளைஞர்களின் மைதானக்கனவின் யதார்த்த நோக்கில் நம்பிக்கை வைத்து இப்பிரசுரத்தை மன்றத்தலைவரின் முன் அனுமதி இன்றி பிரசுரித்த பணிப்புலம் இணையத்தினரின் முயற்சியை மன்னித்து அவர்களின் ஏகோபித்த பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். -அழ. பகீரதன் தலைவர் மறுமலர்ச்சி மன்றம்

மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் என்ற பெயரில் எமக்கு கிடைத்த துண்டுபிரசுரம்

தற்போது காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் உருவாக்கப்படும் கோவில்  தயாரிக்கப்பட்ட திட்ட அளவுக்கு மாறாக பெரிதாக உள்ளது.  இது எதிர்காலத்தில் இருக்கும் மைதானத்திற்கு பெரும் இடைஞ்சலாக அமையப் போகின்றது.  இது பற்றிய மன்ற இளைஞர்களின் வேண்டுகோள் ஒன்று.

22 Responses to “மறுமலர்ச்சி மன்ற நிர்வாக அறிவித்தல்”

 • Chandrahasan:

  இன்று நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘பண்டாரங்கள் வீடு கட்டுவதை போல’ என்ற வாக்கியத்தை நீக்கிவிடும்படி கேட்டிருந்தார். அப்போதுதான் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை உணர்ந்தேன். விளக்கமில்லாமல் நான் எழுதிய படியால் அது சிலரின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மனதார மன்னப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

  இப்போது அதன் விளக்கத்திற்க்கு வருகிறேன். இங்கு தமிழரொருவருடைய வீட்டை வடிவமைத்துக் கொண்டிருக்கையில் எதிர்கால பொருளாதர நிலை தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்றேன். அப்போது அவர் ஓமோம் பண்டாரங்கள் வீடு கட்டுவதுபோல கட்டக்கூடாதுதான் என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்றேன். அவர்கள் ஒண்டையும் யோசியாமல் அந்தந்த நேரம் கிடைக்கும் காசை வைச்சு கட்டிக்கட்டிக் கொண்டேயருப்பார்கள் என்றார். அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டேன். பார்க்கவில்லை ஆனால் பிளான் இல்லாமல் வீடு கட்டுபவர்களைப் பார்த்து அப்படித்தான் ஊரில் சொல்லுவார்கள் என்றார். உடனே நான், அப்படி இல்லை நானும் ஒரு பண்டாரம்தான். எல்லா ஊரில் உள்ளது போலத்தான் எங்கள் ஊரிலும் வீடு கட்டுகிறார்கள் என்றேன். அவர் திகைத்துப்போய் ஆளை விடு நான் தெரியாமல் சொல்லிப்போட்டேன் என்றார். அப்போதுதான் யாழ்ப்பாணத்தவரிடமிருக்கும் இந்த வழக்கு எனக்கு தெரிந்தது.

  நான் எனது ஊரையும் சாதியையும் எண்ணி என்றும் பெருமைப்படுவதோடு அதற்கு பெருமை சேர்க்க விரும்புகிறவன். எங்களில் படித்தவர்கள் அயலவரிடம் நண்பர்களிடம் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்கையில் பல்கலைகழக நண்பனொருவனின் ஆய்வுக்கு எனது சாதியை ஆய்வுப் பொருளாக எடுக்க வைத்தேன். நான் வேண்டுவதெல்லாம் நான் கற்ற தொழிலை எனது ஊருக்கு உதவ வழிவிடுங்கள் என்பதே.

  மீண்டும் உணர்வு வசப்பட்டு எழுதிய வாக்கியங்களால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்::

   Sorry நான் மன்னிக்கமுடியாது. ஏனென்றால் நான் 150 எழுத்துக்களுக்கு மேற்பட்ட கருத்துகளை வாசிப்பதில்லை (LOL ) . இதில் பகிடி என்னவென்றால் மன்னிப்பு கேட்கிறது என்றுவிட்டு அந்த வசனத்தை குறைந்தது 4 தரம் பாவித்து விட்டீங்கள். இந்த இணையத்தை எங்கட ஊரவரற்றவர்களும் பார்க்கிறவர்கள். படித்த நீங்களே இப்படி எழுதினால் – என்னைப்போல் பாமரர்களின் கருத்துக்கள் பரவாயில்லை போல. நீங்கள் எழுதுற கருத்துக்கள்தான் post பண்ணபடுகிறது – என்ர சில கருத்துக்களை காணலே. Censor Board இம் பாரபட்சம் பார்க்கதொடங்கிட்டுபோல.

   • Chandrahasan:

    எங்கள் அயலவர்கள் பண்டாரம் என்று எங்களை அவமானப்படுதுவத்காக சொல்லிச் சொல்லியே அதை ஒரு அவமானமான சொல்லாக எங்களையும் நினைக்க வைத்துவிட்டார்கள். உண்மையிலேயே அது ஒரு அற்புதமான சொல்லு. நான் பிறப்பில் ஒரு பண்டாரம் என்று மற்றவர்களுக்கு சொல்வதில் பெருமைப் படுவேனேயொழிய வெட்கப்படுவதில்லை. எங்களிடம் சில குறைகள் இருக்கலாம் ஆனால் அதற்க்கு மேலாக பல பாரம்பரிய கலைகளை தொழிலாக்கொண்டவர்கள் என்ற பெருமை எமக்குண்டு.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்::

   நிச்சயமாக ஒவ்வொரு வகை மனிதர்களிடமும் ஏதாவது குறைபாடுகள் இருப்பது இயல்பு. அவற்றில் சிலவற்றை வேறூரவர்களுக்கு மறைப்பதனால் எம்மூரவர்களின் பல சிறந்த, அரிதான, பாரம்பரிய கலைகளின் சிறப்புத்தன்மையும் எம்மூரவர்களின் தனித்துவமான (uniqueness ) திறமையும் மறைந்து போய்விடுகின்றன – வேதனையான விடயம்தான்.

   மேற்கத்தேய நாட்டவர்கள் இக்கலைகளை (உ: மாலைகட்டல், சாத்துபடி, மேலும்பல) பார்த்தால், தம்நாட்டில் திரும்பிவந்து அக்கலைகளை மேம்படுத்தவும், மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் ஒரு கலைக்கூடம் (என்னுடைய கற்பனை பெயர்: University of Quaks´ Arts என்ற பெயரில்) ஒன்றை அமைத்து, அத்துடன் அக்கலைகூடத்தில் இன்னொரு பிரிவு/faculty ஒன்றில் எம்மூரவரின் பாரம்பரிய மொழியை ஆராய்ச்சி செய்யும் பிரிவாக (அடே அடே போதுமடா சுதர்சா உன்ட எல்லையில்லா கற்பனைக்கு) இயங்கவும் வழி செய்வார் அந்த மேற்கத்தேயர்கள்.

   ஆனால் கட்டடங்கள் கட்டும் விடயத்தில் எங்கட ஊரவர் கோட்டைவிடுபவர்கள் என புலம்பெயர்நாடுகளில் வேறூரோர் சொல்ல கேட்பது யாம் அறியேன்.
   புலம்பெயர்நாடு ஒன்றில் எம்மூரவர் நடைமுறையில் உ Restaurant இலோ, துப்பரவு செய்யும் பிரிவிலோ வேலை செய்பவர்கள் எங்கட ஊரவரற்றவர்களுக்கு பெருமையாக நான்/தான் (censored word 🙂 ப****ம் என்று பெருமையாக நெஞ்சை நிமித்தி கூறுபது, நடப்பது என்பதும் என் கற்பனைகளில் ஒன்றே. அப்படியும் அது உண்மையில் நிகழ்ந்தால் அவர் படிப்பிலும் தொழில்றீதியுலும் விண்ணைதொட்டபவராக தான் அவர் இருப்பார். அதன் விகிதாசாரப்படி பார்த்தால்: 100 இற்கு 0,01% ஆகத்தான் அமையும்.
   _
   என் கருத்துக்கள் main கட்டுரையை விட்டு தடம்புரண்டு எங்கயோ போகுது. சரி அப்ப.

 • selvarajah:

  அம்பாள் துணை.
  சிறுவர்களின் முன்னேற்றத்தையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு மன்றத்தினர் செய்யப்போகும் கட்டட அபிவிருத்தியில் எந்தவித இடையூறும் விளைவிக்காமல் அவர்களோடு இணைந்து பங்காற்றுமாறு எங்களூர் பெரியோர்களையும் சமயத்தொண்டர்களையும் குருமார்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  நன்றியுடன்
  வெளிநாடுகள் வாழ் பணிப்புலத்து அகதிகள்.
  நன்றி,வணக்கம்

 • Chandrahasan:

  அண்மைகாலமாக எனது வாழ்வில் பல சோதனைகள் வேதனைகளைச் சந்தித்துள்ளேன். அவை எல்லாவற்றையும் விட மோசமாக இரண்டு நாட்களாக நித்திரை கொள்ள முடியாதளவிற்கு வேதனையை தந்தது இந்தப் படங்கள். இரண்டு நாட்களாக இடைவிடாது உலகெங்குமிருந்து எம்மவர்கள் தொடர்புகொண்டு தமது கவலையை ஏமாற்றத்தை தெரிவித்தனர். கனவு கனவாகியே போய்விடுமோ என சந்தேகம் கொண்டனர்.

  சுருங்கச் சொன்னால் இது அறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் கிடைத்த சம்மட்டியடி. தாயகத்தில் முன்மாதிரியாக எதிர்கால சமூகத்தின் நலன் கருதி விற்பன்னர்களால் திட்டமிடப்பட்ட முதல் அபிவிருத்தித் திட்டம் என்ற பெருமையோடு அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிற புலம்பெயந்த எம்மவர்களது மூஞ்சையில் காறி உமிழப்பட்டுள்ளது.

  இந்த அத்திவாரத்திற்கும் திட்டத்திலுள்ள கோயிலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அவசரவசரமாக எந்த வரைபடமுமில்லாமல் பின்னால் உள்ள மடத்தை அப்படியே முன்னால் நகர்தியுள்ளார்கள். கட்டடகலைஞர் கீறி அனுப்ப முன்னரே அத்திவாரம் போட்டுவிட்டார்கள். கட்டடக்கலைஞரும் சாட்டையடி. அவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்கும் என நம்புயிருந்த எமக்கும் சாட்டையடி. இது பற்றி தேவராஜாவிடம் கதைத்தபோது சகலவேலையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

  திட்டத்தின் முகப்பில் அமையவிருக்கும் கோயிலின் கட்டடக்கலை வடிவம் மிகமுக்கியமானது. அது பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அழகாக இருக்க வேண்டும். பெரிதுதான் அழகென்ற மாயை களையுங்கள். கொம்பனித்தெருவில் தண்ணீருக்கு நடுவே அமைந்த சிறிய கங்காராம பன்சலவே கொழும்பில் அழகான பௌத்த கோயிலாக வெளிநாட்டவர்களும் வந்து பார்வையிடுகிறார்கள். இது இலங்கையின் புதிய பாராளமன்றத்தை வடிவமைத்த ஜிவ்ரி பாவா என்ற புகழ்பெற்ற கட்ட்டக்கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

  எமது கட்டடக்கலைஞரின் Master Plan இல் உள்ள அமைப்பு சூழலுடன் இயைபுறுவதுடன் திராவிடக் கட்டடக்கலையும் தியான உணர்வையும் உள்வாங்கியுள்ளது. இவ்வமைப்பு மெருகூட்டப்பட்டு கட்டுவதற்கு தேவையான வரைபடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். பல நூறு வருடங்கள் நிற்கவேண்டிய கட்டடம் எப்படி அமையவேண்டுமென்பதை சில மணித்தியாலங்களில் தீர்மானிக்க முடியாது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இரண்டு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் சிறிய நிர்மாண வேலையை திட்டமிட இரண்டு வருடங்கள்கூட எடுப்பார்கள்.
  மற்றோர் பார்த்து வியக்க நாம் பெருமை கொள்ளும் வகையில் திராவிடக் கட்டடக்கலையின் நவீன வடிவில் அழகிய சிறிய கோயிலை கட்டடக்கலைஞருடன் இணைந்து உருவாக்கும்வரை பொறுத்திருங்கள்.

 • சச்சி:

  இக்கோவிலை கட்ட முயற்சி செய்பவர்களுக்கு அடியேனின் சிறு வேண்டுகோள்! ஏற்க்கனவே இருக்கும் கோவில்களை பராமரிப்பது சாலச்சிறந்தது .

 • கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கு.
  குடிகள் இல்லா ஊரில் கோயில் இருக்க கூடாது என்று இல்லைத்தானே
  ஏன்? ஏன்? ஏன்? கோயில் திருப்பணி என்றால் இங்க பேப்பர் எடுக்க அங்க ஆரம்பித்து விடுவார்கள்
  மண்றத்தினதும்; சனசமூகத்தினதும் வேலைத்திட்டங்கள் எல்லாம் வரைபடத்தோடுதான் [பெருமூச்சு] இருக்கு

  இந்தப் புதினத்தையும் கேளுங்கோ ஊரில இருக்கிறவைக்கு வெளிநாட்டில இருகிறவையின்ர காசு மட்டுந்தான் வேனும் உங்கட அபிப்பிரயம் ஒன்றும் வேண்டாம்.
  காசை அநிப்பிப் போட்டு எதையும் யோசிக்காமல் வேலைக்குப் போவம் .அண்மையில் சென்று பார்தவள்

 • Chandrahasan:

  தவறோ சரியோ இந்த செய்தி எல்லோரையும் உலுப்பிவிட்டது. கட்டடக்கலைஞர் மன்றத்தின் கோரிக்கைக்கிணங்க அவசரவசரமாக கோயிலை வடிவமைத்து கொடுத்துள்ளார். இது எனக்கு கிடைக்கவில்லை. அவர் தற்போது மலேசியாவிலுள்ள படியால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது. மன்றத்திடம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.
  மன்றத்தின் முகப்பாக அமையவிருப்பதால் அதன் வடிவம் முக்கியமானது. இதன் வடிவம் முழுமையான திட்டத்தின் கட்டடக்கலை வடிவத்தை தீர்மானிக்கக்கூடியது என்பதால் அவசரப்படாமல் அவதானமாக ஆழச்சிந்தித்து செய்யவேண்டும். பூச்சாண்டி காட்டி மலினமான தெருக்கோயில் கட்டி திட்டத்தின் கட்டடக்கலை தரத்தை இறக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.

  பிரேமதாசாவிற்காக மாளிகாவத்தையிலும் குணசிங்கபுரவிலும் கோயில்கள் வடிவமைத்தவன் என்ற வகையிலும் கட்டடக்கலைஞாக 33 வருடங்கள் பணிபுரிந்தவன் என்ற வகையிலும் தற்போது யாழ் நகரின் பிரதான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசுக்கும் மாநகரசபைக்கும் ஆலோசனை வழங்குபவன் என்ற வகையிலும் இக் கோயிலின் வடிவமைப்பு பற்றி ஆலோசனை வழங்க எனக்கு தகுதி இருக்கிறது என நம்பினால் நான் அந்த வரைபடங்களை பார்த்து திருத்தம் செய்யும் வரை பொறுக்கவும். கூரைகளை மாற்றுவது அதன் வடிவமைப்பையே மாற்றும் என்பதையும் அது சொல்லும் செய்தியையே மாற்றும் என்பதையும் அது உருவாக்கும் உணர்வையே மாற்றும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
  ‘பண்டாரங்கள் வீடு கட்டுவதைப் போல’ என்ற யாழ்பாணிகள் வழக்கை நிரூபிக்க வேண்டாம். என்ன மாற்றமானாலும் வரைபடத்தில் போடப்பட்டு கட்டடக்கலைஞரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே கட்டப்படவேண்டும். ஒரு கல்லுக்கூட வரைபடத்தில் இல்லாமல் கட்டக்கூடாது.
  தயவுசெய்து பொறுத்திருங்கள். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம் போல் கட்டி பிச்சைகாரன் சத்திபோல் ஆக்காதீர்கள்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  ஒரு தனியார் நிறுவனத்தின் (Pvt Ltd) விடயங்களை   நிலைமையை திட்டங்களை பிரசுரிக்கமுடியாமை (competition பிரகாரம் )விளங்கக்கூடியது – ஒரு பொது உடைமையின் நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட குழுக்களுக்குள் தகவல் பரிமாற்றம் போதும் என்பதும்…. ஒன்றும் விளங்காமல் இருப்பதும்  சிலநேரங்களில் எமக்கு (invisible shareholders) நன்மைபோல். இணையம் எமக்கும் எமது ஊரவர் யாவருக்கும் என்று பல இடங்களில் வாசித்திருக்கிறேன். சகல பிரிவினரும் தகவல்களை பிரசுரிக்க இணையத்தை நாடலாம். ஆனால் இணையம் அத்தகவலின் உட்பொருளை ஆராய்ந்தபின் தான் பிரசுரிக்கலாம் என்பது…எனது கண்ணோட்டம் எல்லாம் வித்தியாசம்போல்….
   

 • விசு.க.விமலன்.:

  எதையும் தீர விசாரித்து ஆராயாமல் துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதென்பது பல பாதகமான விளைவுகளைக் கொண்டுவரலாம். மறுமலர்ச்சி மன்றத்தில் அமையவிருக்கும் விளையாட்டு மைதானத்தில் எங்கு உதைபந்தாட்டத்திடல் அமைவது எங்கு வலைபந்தாட்டத்திற்குரிய இடம் அமைவது எப்படி கிறிக்கற் மைதானத்தை உள்ளடக்குவது போன்ற திட்டங்கள் முளுமை பெறவில்லை.
  இத் திட்டமிடலானது பல விளைவுகள் எதிர்விளைவுகளை மனதிற்கொண்டே உருவாக்கப்படுகின்றது. கோவில் விடையத்தைப் பொறுப்பேற்ற கட்டிடக்குழு உறுப்பினர் மன்றத்தின் மூத்த உறுப்பினர். அவர் சம்பந்ப்பட்ட அனைவரினுடனும் தொடர்பை வைத்துக்கொண்டே தனது பணியைத் தொடங்கியிருந்தார்.

  நடைமுறைப்படுத்விருக்கும் சகல விடையங்களையும் (நிதி உட்ப்பட) இணையங்களில் பிரசுரித்துவிட முடியாது என்பதே யதார்த்தம். இவற்றை மனதிற்கொண்டு உங்கள் சந்தேகங்களைச் சம்பத்தப்பட்டவர்களுடன் பேசித்தீர்த்துக்கொள்வதே சிறந்த வழி.

  மேற்ப்படி தண்ணீர் தடாகம்பற்றிய ஆய்வும் கனடாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் பின்னர் அறியத்தரப்படும். ஒவ்வொன்றாக நிறைவேற்றி முடிப்பதே சிறந்த்து.

 • Ratnarajah:

  கட்டிடக்கலைஞரின் திட்டமிடலின் வரைபடத்தில் உள்ளவாறுதான் எதுவும் நடக்கும். நாங்கள் நினைத்தமாதிரி கட்டுவதற்க்கு இது சாதாரண விடயம் அல்ல இது ஒரு பாரிய அபிவிருத்தித் திட்டம். இது எங்கள் சிறுவயதுக்கனவுகள் கைகூடும் நேரம்.திட்டத்தில் இல்லாத ஒன்றினைச் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றால் கட்டிடக்கலைஞரின் அனுமதியோடும்,ஆலோசனையோடும் மாற்றங்கள் செய்யமுடியும் என்றால் மாற்றங்கள் செய்யவும். தயவு செய்து ஒருவரும் தப்பாக சிந்திக்கவேண்டாம் .சில கருத்துமோதல்களே ஒழிய கருத்துவேறுபாடுகள் என்று ஒன்றுமில்லை.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   OK ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம். கட்டிட கலைஞரின் திட்டமிடல் வரைபடத்தில் உள்ளவாறு தான் எதுவும் நடக்கலாம். ஆனால் மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் தான் அந்த கட்டிட கலைஞரின் திட்டமிடல்/வரைபடம் அமையவேண்டும் என்பது தான் முதல் முக்கியமாக அமையவேண்டுமல்லவா? திடடமிடலிற்கு ஏற்றவாறு தான் மக்களின் அபிலாஷைகள் அமைய வேண்டுமா? அல்லது என் விளக்கம் பிழையா?

   • அழ பகீரதன்:

    இந்த பிளானிலுள்ளபடி அற்புதமான கோயிலை அதன் புறச்சூழல் சுற்றவரத்தண்ணீருடன் கட்டி அழகு பார்க்க எனக்கும் ஆசைதான் ஆனால் அதற்கு பணம் தேவை என்று சொல்லுகின்றார் கட்டிட கலைஞர். எமது மைதானக்கனவை நிறைவேற்றும் வகையில் புறச்சூழல்களையும் தண்ணீர் உள்ள அமைப்பையும் தவிர்த்து வெறுமையான கோயிலை மட்டும் தான் பிளானில் உள்ள உயர அளவில் செய்ய விரும்புகின்றோம். முன்னுக்குள்ள கொங்கிறீற் அமைப்பைக்கூட இப்போது கட்ட விரும்பவில்லை. காரணம் வெக்கை. இந்த அமைப்பு எங்கள் வெப்பசூழலுக்கு பொருந்துவதாக இல்லை. எனவே ஓடு போட்டுவேய விரும்புகின்றோம்.

 • T.SANKAR...palarmo:

  இது அதிர்ச்சி தரும் செய்தி. எமது உரில் இருக்கும் கோவில்கள் காணும் அன்பு பெரியோர்களே ஸ்ரொப் மற்றும் கருத்து எழுதும் அன்பு உறவுகள் உங்கள் சொத்த பெயரில் எழுதவும் இது முக்கியமனே கேள்வி மறுமலச்சி மன்ற இளஞர்களே நிங்கள் ஒன்று சேந்து தடுத்து நிறுத்தவும் இவ் இடத்த எமது குழத்தகளுக்கு விண்டு குடுக்கவும் அன்பு பெரியோர்களே எமக்கு என்று ஒரு விளையாண்டு இடத்தில் கோவில்கள் கண்டினால் எமது வருங்கால உறவுகள் எங்கே பொய் விளையாடுவது ??? என் முருகன் உங்களை கேண்டதோ தன்னை பெரிதாக்க சொல்லி என் இப்பிடி சித்திக்கின்றின்கள் விளங்கவில்லேயே அத்த இடத்த சிறு பிள்ளை பூங்கா மன்றும் இளஞர் விளையாண்டு வயோதிபர்களின் வைத்து அரண்ட அடிக்கும் இடம் அப்பிடி நினைத்து பாருங்கள் அதில் இருக்கும் சத்தோசம் மிக பெரிது

 • விசு.க.விமலன்:

  திட்ட வரைவுகளிற்கு அமையாத எந்த ஒரு செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஊரில் இருக்கும் 4 பெரிய கோவில்களும் வேண்டியளவிற்குப் போதுமானதே. கட்டுமானக்குழு இதனைக் கருத்திற்கொள்ளும் என நம்புகின்றோம்.

 • selvarajah:

  அம்பாள் துணை, எல்லோருக்கும் வணக்கம்.
  இது என்ன புதுக்குழப்பம்?
  வீட்டுக்கு வீடு கோயில்கள் இருந்தால் யார் எந்தக் கடவுளை வணங்குவது?எப்போது வணங்குவது.கடவுள்களே குளம்பி விடுவார்கள் யார் யாருக்கு அருள் கொடுக்க வேண்டுமென்று. யாருக்கு நன்மை. ஊருக்கு ஒரு கோயில் போதுமானதே. அதை விட பணிப்புலம் என்ற ஊரவர்கள் இப்போ ஆறு பெரிய கோவில்கள்.ஏழு சிறிய கோயில்கள் உள்ளன.(எனக்குத் தெரிந்தளவில்) இவை போதாதா?
  ம.மன்றத்தில் எங்கள் காடேறி வயிரவர் கோயில்மாதிரி ஒருசின்னக்கோயில் இருந்தால் போதுமானது என்பதே எனது கருத்து.
  சிறுவயதில் நானும் எனது தந்தையும் தினமும் சென்று விளக்கு வைத்த்து எனக்கு நினைவிருக்கிறது

 • நந்தகுமார்:

  மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தினருக்கு ஒர் வேண்டுகோள். எனக்கு தெரிந்த வகையில் மன்றத்தில் இருக்கும் அந்த மடத்தை தயவு செய்து கோவிலாக தரமுயர்த்த வேண்டாம். எங்கள் ஊருக்கு ஒரு ஒழுங்கான விளையாட்டுதிடல் வேண்டும். அதையும் இப்படி கோவில் கட்டி விளையாட்டுதிடலின் அளவை குறைக்க வேண்டாம். என்னைப் பொறுத்த வரை மன்றம் ஒரு வெற்றி மடம்.. அதாவது மடம் என்றுதான் இருந்தது. இருக்கின்றது. இருக்க வேண்டும். நாங்கள் வெற்றி மடத்திற்கு முன்னர் சென்றது விளையாடுவதற்கே..கும்பிட அல்ல… தயவு செய்து இதை ஒன்றையாவது அதன் போக்கில் விட்டு விடுங்கள். உங்கள் கோவில் கட்டும் திறமையை வெறும் 1000 மிற்றர் தொலைவில் இருக்கும் அம்மன் கோவிலிலோ இடுமன் கோவிலிலோ காட்டுங்கள்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   நன்றி நந்தன் அண்ணை. நான் எழுத/கூற நினைத்த விடயத்தை நீங்கள் வெளிப்படுத்திவிட்டீர்கள். எமது குரும்கிராமத்தில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையும் அதை அடிப்படையாக கொண்ட பாரபட்சம் பார்க்கும் / பிரிவினைகளும்/மனப்பாங்கும் இனி உருவாக இருக்கும் திட்டங்களில் உள்ளடக்க வேண்டாம். கோயில் உருவாவதற்கு நான் எதிர்ப்பு இல்லை – கோயில்கள் ‘மட்டும்’ உருவாவதற்கு நான் உடன்பாடில்லை, என்னை போல் இன்னும் பலபேர் இருப்பார்கள் என்று நம்புகிறேன். எதிர்கால சந்ததியினர்க்கு கடவுள் நம்பிக்கைக்கு அப்பால் பல பொது, கலை, கல்வி, விளையாட்டு, அறிவு சார்ந்த அத்திவாரங்களை உருவாக்குவதில் ஆவது இனியாவது (2011 ) கவனம் செலுத்தலாம். இந்த விடயத்தில் கொஞ்சம் இளையவர்களின் விருப்பத்திற்கு இணங்க பெரியோரும் சம்பந்தபட்டவர்களும் ஒத்து போவது நன்றும் நன்றியும்.

 • நிச்சயமாக எங்களிற்கு மைதானம் தேவை அந்த மைதானத்தை எதிர்கால சந்தததியினருக்காக விட்டடுக் செல்லுங்கள்….

 • Chandrahasan:

  இது அதிர்ச்சி தரும் செய்தி. அபிவிருத்தித் திட்டம் விளையாட்டுத்திடலை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. விளையாட்டை பாதிக்கின்ற அபிவிருத்தித் திட்டத்தில் எந்த அர்த்தமுமில்லை. மறுமலர்ச்சி மன்ற அங்கத்தவர்களிடம் உயரிய சமூக பண்பு ஏதாவது இருக்குமானால் அது ஒன்றிணைந்து அன்று அந்த வளவில் விளையாடியபோது உருவாகியதே.

  கோயிலுக்காக விளையாட்டுதிடலை நாசமாக்குவது மிக மோசமான சமூகத் துரோகமாகும். அந்தப்பழியை ஒருவரும் ஏற்கமாட்டார்கள் என நம்புவோமாக. அத்தகைய அயோக்கிய செயல் நிகழுமாயின் அதனை தடுக்க இளைஞர்கள் களமிறங்க வேண்டியது அவசியம். புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவாகவிருப்பார்கள்.

  மேலும் உலகத்தரமான கட்டடக் கலை வடிவத்தை உருவாக்க அதிக செலவில் கட்டடக்கலைஞரை நியமித்துள்ளோம். அவருடைய அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டுமானமும் உருவாகக்கூடாது. புலம் பெயர்ந்த மக்களின் கடும் உழைப்பின் விளைவாக உருவாகவிருக்கும் இந்த கட்டமைப்பு சரியான திட்டமிடலினூடாகவே உருவாக்கப்படவேண்டும். அரைவேக்காட்டு கற்றுக்குட்டி தனங்கள் ஒரு செங்கல்லில் கூட தெரியக் கூடாது என்பதில் உறுதியகவுள்ளோம்.

 • ஒன்றுமே விளங்கவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்