உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


வெள்ளை மாளிகை மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜோர்ஜியாவைச் சேர்ந்த 21 வயதான Hasher Taheb என்ற சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்.பி. ஐ தலைமையிலான கூட்டு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை மாளிகை உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய இடங்களில் குறித்த சந்தேகநபர் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள 21 வயதான Hasher Taheb தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்