Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்று முன்தினம் கடந்த புதன்கிழமை (16) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில், படுகாயமடைந்த மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,“பாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தைக் காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையை அதிபர் தனது அறையில் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இதுவரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளன. எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென” தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்