Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சிலியின் வடமத்திய பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சிலி நேரப்படி நேற்று (சனிக்கிழமை) இரவு 10.32இற்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் பழைய கட்டடங்களுக்கு சிறிதளவு தேசம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின்போது வீடுகள் குலுங்கியதால் சுனாமி பீதியில் மக்கள் வீதிக்கு ஓடியுள்ளனர். எனினும், சுனாமி ஏற்படாதென பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.

சிலியில் கடந்த 2010ஆம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 525 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காணாமல் போனார்கள். சிலியின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்