Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



துருக்கி – இஸ்தான்புல் நகரில் 8 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் 6 பலத்த காயமடைந்த நிலையில், 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான உடனடிக் காரணங்கள் எவையும் வௌியிடப்படவில்லை,
குறித்த கட்டிடத்தில் உள்ள 14 குடியிருப்புகளில் 43 பேர் பதிவு செய்து கொண்டுள்ளதாக இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், அந்த குடியிருப்பு கட்டிடத்தின் மேலாக உள்ள 3 மாடிகள் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டார்.அத்துடன், முதல் மாடியில் ஒரு அனுமதி பெறாத ஆடை விற்பனை நிலையம் ஒன்றும் நடத்தப்பட்டு வந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்தநிலையில், துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால மீட்பு பிரிவினர் கட்டிடத்தின் இடிபாடுகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்