Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தலுடன்; தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் பேச்சாளரிடம், இந்த விவகாரம் குறித்து, இலங்கை அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு நடத்தியுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘மனித உரிமை மீறல் விவகாரங்களையும் உள்ளடக்கிய கொள்கை ரீதியான கலந்துரையாடல்கள், இலங்கை அரசாங்கத்துடன் கிரமமாக நடத்தப்படுகிறது,
எந்தச் சூழ்நிலையிலும், மரணதண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்