Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷ் மற்றும் குழுவினர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மாகந்துரே மதுஷ் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நடைமுறையில் உள்ள சட்டமுறைப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டே மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

எனினும் குறித்த குழுவினர் டுபாய் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும் மதுஷ் இருந்த அறையிலிருந்து கொக்கெய்ன எனப்படும் போதைப்பொருள் சிறியளவு மீட்கப்பட்டுள்ளதுடன், டுபாய் பொலிஸின் சர்வதேச கிளையின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பட்டியலில் மாகந்துரே மதுஷ் உட்பட பல வர்த்தகர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மாகதுரே மதுஷ் மற்றும் குழுவினருக்கு டுபாயில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் மாகந்துரே மதுஷிற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்