உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ரூபா ஒன்றரை கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கைன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (08) அதிகாலை 6.05 மணியளவில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் பயணித்த இந்தியர் ஒருவரின் பயண பொதியை பரிசோதனை செய்தபோது அதில் போலியாக உருவாக்கப்பட்ட பொதியின் அடியில், மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மற்றும் 5 கிராம் (1.005kg) கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் (08) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்த விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பு போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்