Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் பேசிய அவர், இம்மாத பிற்பகுதியில் ஆரம்பமாகும் 40 ஆவது அமர்வில், சபையின் கவனத்தை எடுக்கும் நாடுகள் மத்தியில் இலங்கை இருக்கும் என மிச்சேல் பசெலெட் குறிப்பிட்டார்.

அந்தவகையில் குறித்த பட்டியலில் இலங்கை, நிகரகுவா, வெனிசுலா, குவாத்தமாலா, யேமன், சூடான், மியான்மர், தன்சானியா, உகாண்டா மற்றும் புர்கினா பாசோ மற்றும் சிம்பாவ்வே ஆகிய நாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வுகளில் கவனம் செலுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளது என்றும் பொறுப்புக்கூறலில் மெதுவாகவே செயற்படுவதாகவும், சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை 40 ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் ஏற்கனவே மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கை பற்றிய அறிக்கையை விவாதிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னாரில் புதைகுழியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் விவகாரத்தில் ஐ.நா, பகுப்பாய்வாளர்கள் அதனை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

மேலும் இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் முந்தைய புதைகுழிகளில் செய்தது போல் அரசாங்கம் சிதைத்தோ அழித்தோ விடுவார்கள் எனவும் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்