உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புத்தளம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனுவில பகுதியில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 12 பேரும் நேற்று (சனிக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஓலு மரா என அழைக்கப்படும் ரணவீர ஆராய்ச்சிலாகே ஷானக்க மதுஷங்க என்ற பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் குறித்த 12 பேரிடம் இருந்து இரண்டு கிலோ 300 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, அவர்களை மாராவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் பகுதியில் ஹெரொயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்