உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்