உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இந்தியாவின் டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

4 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் சம்பவத்தின் போது 60-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.இந்த தீவிபத்தில் காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்