உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி வீதியினை விட்டு விலகி பல்கலைக்கழக மாணவிகள் மீது மோதியதாகவும், இதன்போது பல்கலைக்கழக மாணவிகள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்