உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வங்கக்கடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில் சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 609 கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.9ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்