Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐக்கிய நாடுகள் சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் முறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையக உயர் அதிகாரிகள், துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவை இன்று (புதன்கிழமை) சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின் போது மேற்படி விடயம் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகள் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.இதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பெச்சிலெட் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக சமர்பிக்கவுள்ள அறிக்கை குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கள நிலை செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்பான அத்தியட்சகர் Georgette Gagnon, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் சட்டம் சமத்துவம் மற்றும் இன வன்முறைக்கெதிரான அலுவலக பிரதானி Mona Rishmawi ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

பிரதமர் அலுவலக பிரதானி என்ற அடிப்படையில் அமைச்சர் சாகல ரத்னாயக்க இக்கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்