உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.சிங்கப்பூரில் உள்ள டவுன்நகரில் காரல்டன் என்ற பிரபல ஹோட்டல் உள்ளது.
இந்த ஹோட்டலில் எலெக்ட்ரிக்கல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென்று தீ பிடித்தது. இதையடுத்து புகை உணர் அலாரம் அடிக்க, அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் பதறியடித்தனர். பின்னர், தீ மளமளவென அறை முழுவதும் பரவத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், ஹோட்டலில் தங்கியருந்த நூற்றுக்கணக்கான மக்களை மொத்தமாக வெளியேற்றினர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மளமளவென பரவிய தீயை அனைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை தெரியவில்லை. இருப்பினும், இதில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும், உயிர்சேதமும் ஏற்படவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்