உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதில் 50 பேர் பலியானார்கள்.
இந்த நிலநடுக்கத்தில் 100 கட்டிடங்கள் சேதமடைந்தன. 40 பேர் காயமடைந்தனர். மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வடக்கு தாய்லாந்திலும் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஓரளவு சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தில் மியான்மரின் தாச்லெக் நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு ஓடிவந்தனர். சாலைகளில் விரிசல் காணப்பட்டன.

கடந்த 15 ஆண்டுகளில் வடக்கு மியான்மர் மற்றும் தாய்லாந்துப் பகுதிகளில் 5 ரிக்டர் முதல் 7 ரிக்டர் வரை பல நிலநடுக்கங்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு மற்றும் சேதம் வெகு குறைவாகவே இருந்துள்ளன.

நிலநடுக்கத்தின் தாக்கம் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டததாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது வரை 10 ஆண்கள், ஒரு சிறுவன், 13 பெண்கள் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மியான்மர் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்