உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுமார் ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க அபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த 09 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மருதானை, நீர்கொழும்பு, சீதுவை, சிலாபம் மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மற்றும் டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எடுத்து வந்த பயணப் பொதிகளில் இருந்து சுமார் 02 கிலோவும் 974 கிராம் நிறையுடைய தங்க அபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 16,344,179 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்