Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பாகிஸ்தானில் தங்கியிருப்பதை அந்நாடு உறுதிபடுத்தியுள்ளது.பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இதனை உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், தனது நாட்டில் தங்கியிருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.மசூத் அசாத் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

அவர் கடுமையான சுகயீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார்.புல்வாமா தாக்குதலுக்கு ஜய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் காரணம் என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதற்குரிய ஆதாரங்களை இந்திய வெளிவிவகார அமைச்சு பாகிஸ்தானிடம் வழங்கியது.இவ்வாறான சூழ்நிலையில், இந்தியாவின் ஆதாரங்கள் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமென பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

அதற்கமைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் மசூத் அசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு பொறுப்பேற்றது.

அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்