உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் ரொறன்ரோ அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.செவெல்ஸ் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்க்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து சுமார் 52 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிராபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் ரொறன்ரோ சணிபுரூக் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

மேலும் அதே வயதையுடைய மேலும் மூன்று ஆண்கள் மற்றும் 53 பெண்ணும் ஆபத்தான காயங்களுடன் தரை மார்க்கமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தினை அடுத்து ஸ்டீல்ஸ் அவனியூவில் கிழக்கு நோக்கிய வழித்தடங்கள் அனைத்தும் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்