Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனனர்.நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலுக்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக வசந்தகுமார் (வயது – 37), கருணாகரன் (வயது – 33) ஆகிய இருவருமே படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்