உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபது ரயில் நிலையத்தின் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தின் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது.குறித்த சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 36 பேரில், சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தமையால் அதன்கீழ் சென்ற பலர் அதற்குள் சிக்கிக் கொண்டனர். அதனை அடுத்து பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்குறித்த பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளாகி பழுதான நிலையில் காணப்பட்டுள்ளது. ஆனால் அதனை புனரமைக்கும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளாமல் அலட்சிய போக்கில் இருந்தமையே விபத்துக்கு காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்