Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடகொரியா அணுவாயுதப் பேச்சுவார்த்தையைக் கைவிடுவதாக எச்சரித்துள்ள போதும், பேச்சுவார்த்தை தொடரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பம்பியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-வடகொரிய பேச்சுவார்த்தைகள் முறியும் என வடகொரிய வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்த விடயத்துக்கு பதில் வழங்கும் வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இருவருக்கும் இடையே, கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டு சந்திப்பு, கருத்து வேறுபாடுகளுடன் முடிவடைந்தது.

அணுவாயுத ஒழிப்பு, வட கொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில், இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர்.அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வடகொரியாவின் முக்கிய அணுவாயுத நடவடிக்கை எதுவும் தென்படவில்லை என்று அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறுகிறது.

இதேவேளை அணுவாயுத பரிசோதனை அறிவிப்பை வடகொரியா மிக விரைவில் வெளியிடும் என வடகொரியா வெளிநாட்டு அமைச்சர் சொய் சுன்-ஹுய் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்