Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



நியூசிலாந்தில் நேற்று முன்தினம் இருவேறு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள், தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் இருந்த 8 இந்தியர்களைக் காணவில்லை என்றும், இவர்கள் தொடர்பிலான தகவல்களை விசாரணை செய்து வழங்குமாறும் நியூசிலாந்துக்கான இந்திய தூதரகம், நியூசிலாந்து அரசாங்கத்தை கோரியிருந்தது.

இந்தநிலையிலேயே, தற்போது இந்தியாவைச் சேர்ந்த ஐவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த 31 வயதான ஃபராஜ் ஆஷன் என்பவரும், குஜராத்தின் பாருஷ் நகரத்தை பூர்வீகமாக கொண்ட முசா வாலி சுலேமான் பட்டேல் உள்ளிட்ட ஐவரே இந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள் என்று சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அதேநேரம், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த 49 பேரில், பலர் நியூசிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, துருக்கி, சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 49 பேரையும் நினைவுகூர்ந்து மக்கள் விசேட பிரார்த்தனைகளிலும் நேற்று ஈடுபட்டனர்.மேலும், 49 பேர் உயிரிழக்க காரணமான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பிரென்டொன் டரன்ட், நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.

அத்தோடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த கொடூரமானத் தாக்குதலையடுத்து நியூசிலாந்தில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிரான சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர அந்த நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்