Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மன்னார் – தலை மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற விபத்தில், சாந்திபுரத்தைச் சேர்ந்த தனியார் பேரூந்தின் உரிமையாளரான 49 வயதான வி.விமலதாசன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கித் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த வாகனம் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்