Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



துப்பாக்கி சட்டத்தை சீர்த்திருத்துவதற்கு அமைச்சரவையின் ஆதரவு கிடைத்துள்ளதாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்தில் 50 பேரின் உயிரை காவுகொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம், துப்பாக்கி சட்ட சீர்த்திருத்தத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி, சீர்த்திருத்தங்கள் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.துப்பாக்கி சட்ட சீர்த்திருத்தம் தொடர்பாக அனைவரும் ஒருங்கிணைந்து இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரை தானியங்கி துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என நியூசிலாந்து பொலிஸ் சங்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்