Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதனை அறிவித்துள்ளது.
இது குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் கருத்து வெளியிடுகையில்,“தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம். இந்த விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலமாக ஒலிக்கிறது.

இந்நிலையில், இலங்கையில் போர்க்காலத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்