உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஏமனில் வெடிமருந்து ஆலை ஒன்று வெடித்து சிதறியதில் 78 பேர் பலியாகினர்.

ஏமனில் உள்ள ஏபியான் மாகாணத்தில் வெடி மருந்து ஆலை ஒன்று உள்ளது.

அருகில் உள்ள ஜார் நகரில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்துவதற்காக, இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இந்த ஆலைக்குள் அதிரடியாக புகுந்து, அதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்று, தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமான வெடி மருந்தை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் இன்று அதில் நுழைந்து, வெடிமருந்தை அள்ளிச் சென்றனர்.

இந்நிலையில் அந்த வெடிமருந்து ஆலையில் இன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் வசித்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்