Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 16 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா அவர்கள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கும் தடை விதித்துள்ளது.
கஷோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 16 பேர் மட்டுமின்றி அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் முன்னாள் உதவியாளர்கள் இருவரும் இப்பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்புள்ளதாக சர்வதேச நாடுகள் பலவும் குற்றஞ்சாட்டியுள்ள போதிலும் சவுதி அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையினால் கஷோக்கியில் கொலையுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 16 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்