Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று இடைநடுவில் பழுதடைந்துள்ளது.இதனால் அந்த பேருந்தில் பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 03.15 மணியளவில் பயணித்த குறித்த இ.போ.ச. பேருந்து தம்புள்ளையை அண்மித்த காட்டுப்பகுதியிலேயே இவ்வாறு இடை நடுவில் பழுதடைந்துள்ளது.

புதுவருப்பிறப்பை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் வயதானோர் குடும்பங்களாக குறித்த பேருந்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையிலே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் வினவியபோதிலும் எவ்விதமான உறுதியான பதிலையும் அவர்கள் வழங்கவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மிகுதி பணத்தை செலுத்துவதிலேயே அவர்கள் குறியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்