Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கந்தையா கருணானந்தன், கந்தையா இரத்தினசிங்கம், கருணானந்தன் குலோசன், செல்லா கிருசன் ஆகிய நால்வருமே காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை மாத்திரமே தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்