உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள வானளாவிய கட்டிட வளாகத்தில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய வெளிநாடுகளின் தலைமை தூதரகங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து தூதரகங்களும் தவிடுப்பொடியாகும் என்றும் இன்று விடுக்கப்பட்ட மிரட்டலால் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

தூதரகங்களின் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மிகப்பெரிய பரப்பளவு கொண்ட அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம், அங்குலமாக தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்