உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் குப்பிளான் மயிலங்காடு பகுதியிலேயே இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த புகையிலை தோட்டத்தில் நால்வர் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.ஏனைய மூவரும் வேலைசெய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னை மரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்ததி.கண்ணன் (48) க.மைனாவதி (52)ர.சுதா (38) ஆகியோர் மழை காரணமாக கொட்டிலில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி பலியாகினர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்