உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியிலே 18.04.2019 காலை 5.45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

காலியில் மரணவீடொன்றுக்கு சென்று அட்டன் நோக்கி வந்த வேன் ஒன்றே பாதையை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பொன்றுக்கு அருகில் குடைசாய்ந்துள்ளது.

வேனில் பயணித்தவர்களில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் காயமுற்று வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறே விபத்துக்கான காரணமென தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணையை தொடர்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்