உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா-1 எனும் முதலாவது பரிசோதனை செய்மதியானது இன்று (18) இலங்கை நேரப்படி அதிகாலை 2.16 மணிக்கு நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station (ISS)) நோக்கி ஏவப்பட்டுள்ளது.

ஜப்பானின் க்யுஷு (Kyushu) தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இச்செய்மதி 1,000 கன சென்ரி மீற்றர் (cubic centimeter) அளவுடையதும் 1.1 கிலோகிராம் நிறையுடையதும் ஆகும்.
பேராதனை பல்கலைக்கழக மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பட்டதாரியும் ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் ஆராய்ச்சி பொறியியலாளருமான தரிந்து தயாரத்ன மற்றும் அந்நிலையத்தைச் சேர்ந்த எந்திரவியல் பொறியியலாளரான துலானி சமிக்கா ஆகிய இளம் பொறியியலாளர்களே குறித்த செய்மதியை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்திலுள்ள நாசா நிறுவனத்திலிருந்து, அந்நிறுவனத்தின் அந்தரெஸ் (ANTRAS) எனும் ரொக்கெட் மூலம், பூமியிலிருந்து 400 கிலோ மீற்றர் உயர சுற்று வட்டப்பாதையில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

குறித்த ரொக்கெட்டில் காணப்படும் ‘சிக்னஸ்’ (CYGNUS) எனும் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அது அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ‘சிக்னஸ்’ விண்கலம், நாளை மறுதினம் (20) சர்வதேச விண்வெளி மைய்யத்துடன் இணைக்கபடவுள்ளதோடு, அங்குள்ள ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் அதனை பொறுப்பேற்கும் என, காவிந்ர ஜயவர்தன தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த செய்மதி எதிர்வரும் ஜூன் 20 மாதம், பூமியின் சுற்றுப்பாதையில் விடப்படும் என, மொரட்டுவவிலுள்ள, ஆதர் சி. கிளார்க் நிலையத்தின் நனோ செய்மதி திட்டங்கள் தொடர்பான திட்ட முகாமையாளரும், தொலைத் தொடர்பாடல் பொறியியல் பணிப்பாளருமான காவிந்திர ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

ராவணா-1 சிறிய ரக செய்மதியானது, இலங்கை விண்வெளி ஆய்வு தொடர்பில் காலடி வைக்கும் வகையிலான, இலங்கையின் முதலாவது ஆய்வு செய்மதியாகும்.

ராவணா-1 ஐந்து குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையையும் அதனை அண்டிய நாடுகளையும் படம் பிடிக்கும் வகையில் அதன் கமெரா தொடர்பான குறிக்கோள் அமைந்துள்ளது.அதன் Lora செயல்விளக்க குறிக்கோளானது, இதிலுள்ள ஏனைய செய்மதிகளுடன் தரவை பரிமாறிக் கொள்ளுதலாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்